Wind Chimes
Wind chimes Wind chimes என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல் என்ன? இசைச்சரம், இசைத்தோரணம், மணிச்சரம், மணித்தொங்கல், மணிக்கொத்து, மணியூசல், ஒலிச்சரம், ஒலித்தோரணம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம். சரம், தொங்கல், ஊசல், தோரணம் ஆகியவை காற்றில் ஆடும் தன்மை கொண்டவை. எனவே காற்று என்ற சொல்லை இணைக்கத் தேவையில்லை. Water Fallsக்கு அருவி என்ற சொல்லிருக்க, நீர்வீழ்ச்சி என்று சொல்பெயர்ப்புச் செய்தது போலிருக்கும், காற்று என்ற சொல்லை இணைப்பது. மணி என்பதும் இசையை எழுப்பக் கூடியதே. உடன் அழகிய வேலைப்பாடு அமைந்த கலைப்பொருட்களையும் குறிக்கும். எனினும் காற்று என்ற சொல்லை இணைக்கத்தான் வேண்டுமெனில்..... காற்று இசைச்சரம், காற்று இசைத்தோரணம், காற்று மணிச்சரம், காற்று மணிக்கொத்து, காற்று மணிஊசல், காற்றிசை மணி, (அ) காற்று இசைமணி, காற்றோசை மணி, காற்றொலிச்சரம், காற்றொலித்தோரணம் எனவரும் சொற்களையும் பயன்படுத்தலாம். விண்ட் சைம்ஸ் என்ற சொல், பன்மையாக இருக்கிறது. பல மணிகள், பல பொருட்கள் ஒருங்கிணைந்த அமைப்பாக இருப்பதால் பன்மை எனப்படுகிறதோ என்னவோ? சரம், ...